ஆங்கில மொழி உலக மொழியாயிற்று. ஆங்கில மொழி வளர்ச்சிக்குக் காரணம் அம்மொழி பேசுபவர்கள் தாங்களே வலியச் சென்று, மற்ற மொழிகளுக்குச் சொந்தமான வார்த்தைகளை ஆங்கிலத்தில் சேர்த்துக் கொண்டதே. ஆங்கிலத்தில் ஆங்கிலம் ஐம்பது சதவீதம் மட்டுமே என்று ஒரு ஆங்கிலேயர் சொன்னார். மீதம் ஐம்பது சதவீதம் மற்ற மொழிகளிலிருந்து கடனாகப் பெற்றவை. ஏன் தமிழ், தெலுங்கு மொழி வார்த்தைகள்கூட கடன் வாங்கப்பட்டு ஆங்கில மொழி வார்த்தைகளாகி ஆங்கில அகராதிகளில் இடம் பிடித்துவிட்டன. உதாரணம் கட்டுமரம் ஆங்கிலம் வளர்ச்சியடைந்த மொழி அல்லது வளர்ச்சி பெற்றவர்களின் மொழிகளில் இப்படி வேறு மொழியில் சொற்கள் தாராளமாக அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
தமிழ்மொழியில் பெரும்பான்மையான சொற்களுமே தொன்றுதொட்டு இருந்து வந்தாலும், விஞ்ஞான வளர்ச்சியால் பல புதிய பொருட்கள் உலகமெங்கும் கண்டுபிடிக்கப்பட்டு, பல புதிய மேலாண்மை மற்றும் நிர்வாகச் சித்தாந்தங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இதற்குத் தமிழ்மொழியில் வார்த்தைகள் இல்லாமல் இருக்கலாம். எளிதான புதிய வார்த்தைகள் உருவாக்கப்படுவது மிகவும் அவசியம். ஆங்கில மொழியின் வளர்ச்சிக்குக் காரணம் பிறமொழியிலிருந்து கடன் வாங்கப்பட்ட வார்த்தைகளே. அருவெறுப்பான சொற்கள்தான் கூடாது. கொச்சை மொழிச் சொற்களும் கூடாது.
நான்கு இலட்சியத்திற்கு நான்கு திக்கிலும் மொழி....மொழி பரவும்
தமிழ் மொழியின் வளத்தைக் கூட்டவும், இதர மொழிகளுக்கு இணையாக தமிழ் மொழி வளர்ச்சி பெறவும், அரும்பாடுபடும். இந்த நான்கு இலட்சியங்களோடு மொழி சேவையாற்ற மொழி, "மொழி" இயக்கம் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் வலம் வரும்.
மொழி, "மொழி" என்ற தமிழ்ப் புத்துணர்வு இயக்கம் இதோ ஒரு புனிதப் புயலாகப் புறப்பட்டுவிட்டது. இதன் பிரதான கிளைகள் தமிழர்கள் வாழும் நகரங்களில், கிராமங்களில் உலகமெங்கும் துவக்கப்படும். குடியிருப்போர் பகுதிகளிலும், அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்களிலும் துணைக் கிளைகள் ஆரம்பிக்கப்படும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், கல்லூரி விடுதிகளிலும், அலுவலங்களிலும், தொழிற்சாலைகளிலும் துணைக்கிளைகள் தொடங்கப்படும்.
|