உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

"தேவை ஒற்றுமை, தேவையில்லை பிளவுகள்"

நாம் மொழியால் ஒன்றுபட்டோம், நமக்குள் பிரிவோ, பிளவோ கூடாது. தமிழ்மொழி பேசுபவர்களிடம்தான் எத்தனை பிளவுகள், சாதி, மத, பொருளாதர வித்தியாசங்கள் காரணமாக எத்தனை பேதங்கள். தமழ் சங்கம் வெவ்வெறு கட்சிகளில் இருப்பது தவறில்லை. அதுவே அவர்கள் ஒற்றுமையைக் குலைக்க கூடாது. கம்ப இராமாயணத்தை முழுமையாக படித்து அனுபவித்து இலக்கிய கருத்தரங்கம் நடத்திய ஹாங்காங் இஸ்லாமிய சகோதரர்கள் பற்றி கூறியிருந்தேன். தமிழ் மொழியின் வல்லமை எதுவென்றால் அது நமக்குள்ளே இருக்கும் வித்தியாசங்களை மறக்கச் செய்து, ஒன்று சேர்க்கும் மந்திரம் ஆகும். நாம் அயல்நாடுகளுக்குச் செல்லும் பொழுது, ஒரு அங்காடியிலோ அல்லது இரயில் நிலையத்திலோ வேறு எங்காவது யாராவது தமிழில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், நம் உடலில் ஒரு மின்சாரம் பாயும். நாமே வலியச் சென்று அவரிடம் பேசுவோம், "நீங்கள் எந்த ஊர்?" என்று சிரித்துக் கொண்டே பேசுவோம். வெளிநாடு ஏன், பம்பாய், டெல்லி, ஆந்திரா சென்றால் கூட யராவது ஒரு வழிப்போக்கர் தமிழ்ப் பேசுவதைக் கேட்கும் போது, நம் உள்ளத்தில் விவரிக்க முடியாது உவகை உண்டாகும். நான் கண்டவரை தமிழகத்தைக் கடந்து சென்று வாழும் தமிழர்கள் எவருமே ஜாதி, மத வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. ஜாதியைப் பற்றி என்னுடைய கருத்து, என்னுடைய தடைக்கற்களே படிக்கற்கள் என்ற நூலில் "என் ஜாதி, உன் ஜாதி" என்ற தலைப்பில் 1987-ஆம் ஆண்டே வெளியாகிவிட்டது. சாவி பத்திரிக்கையிலும் வெளியானது. இதோ அது.

தமிழர்களைப் பிரிக்கும் அதிகப்படியான ஜாதி உணர்வு

உன் ஜாதி ...... என் ஜாதி...:

உலகத்தில் யாருக்கும் இல்லாத சில பிரத்யேகப் பெருமை"கள் நமக்குண்டு. ஜாதியின் பெயரால் சங்கம் அமைப்பது அவற்றில் ஒன்று. ஜாதி, ஜாதி என்று வாழ்நாள் முழுவதும் தன் ஜாதியின் பெருமையைப் பேரிகை கொட்டியே கழிக்கும் பேர்வழிகள் பலரை நான் சந்திருக்கிறேன். அவர்களுக்காகப் பரிதாபப்பட்டிருக்கிறேன்.

ஜாதி சங்கங்களில் எனக்கு உடன்பாடில்லை. பல சமயங்களில் இது போன்று சங்கங்களின் அமைப்பாளர்கள் என்னை அவர்களின் விழாக்களுக்கு அழைப்பதுண்டு. நான் மறுத்து அனுப்பிவிடுவேன். சமீபத்தில் ஒருநாள் அப்படி ஒரு சங்கத்தினர் என் வீட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் வந்த அவர் நானும் ஒரே ஜாதி என்றார்கள். நான் எப்போதோ ஜாதியிலிருந்து வெளியேறி வந்துவிட்டேன். இன்னும் சொல்வது என்றால் ஜாதியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டேன். என் மகள், மகனுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்துள்ளோம். வழக்கம் போல் விழாவில் கலந்து கொள்ள அழைத்தார்கள். நான் அன்புடன் மறுத்தாலும், அவர்கள் விடுவதாக இல்லை.

"ஒரு நிமிடம் நான் உங்களுக்கு இப்போது ஒரு சின்னப் பரிட்சை வைக்கப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு வந்திருந்தவர்களில் ஒருவரிடம் ஒரு வெள்ளைக் காகிதத்தைக் கொடுத்தேன்.

"உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் மற்றவர்கள் செய்த நல்ல காரியங்கள் ஐந்தை வரிசையாக எழுதுங்கள்" என்றேன்.

அவர் யோசித்து யோசித்து எழுதினார், அவர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தது, கல்லூரியில் சேர்ந்தது, வேலை பெற்றது, திருமணம் ஆனது, வீடு கட்டியது என்ற ஐந்து நல்ல காரியங்கள் வரிசையாக எழுதிய பிறகு உதவி செய்தவர்களின் பெயர்களை எழுதுங்கள், அதைத் தொடர்ந்து உதவி செய்தவரின் ஜாதிப் பெயரை எழுதுங்கள்" என்றேன்.

ஒவ்வொன்றையும் அவர் மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வந்தார். உதவி செய்தவரின் பெயர்களையும் அவர்கள் ஜாதியையும் நினைவுபடுத்தி எழுதி என்னிடம் கொடுத்தார், கணக்குப் போட்டுப் பார்த்ததில் அவருக்கு அந்த ஐநது நல்ல காரியங்களில் நான்கைச் செய்தவர்கள் வேறு ஜாதிக்காரர்கள். ஒரே ஒருவர்தான் அவரது ஜாதியைச் சார்ந்தவர். அவரிடமே இன்னொரு தாளைக் கொடுத்து, "உங்கள் வாழ்க்கையில் உங்களைப் பாதித்த காரியங்களை எழுதுங்கள்" என்றேன், நினைவுகூர்ந்து நான்கு சம்பவங்களை எழுதினார். அவைகள் அனைத்தும் செய்தவர்கள், அதாவது கெடுதலைச் செய்தவர்கள் அவரது சொந்த ஜாதிக்காரர்கள். அவர் விவசாய நிலத்தில் பத்தடியை ஆக்கிரமித்துக் கொண்டவர், அவர் மகளன் திருமணத்தை நடக்கவிடாமல் கெடுத்தவர், அவரைப் பற்றி அவதூறாகப் பேசியவர், அவரைப் பற்றி மொட்டைக் கடிதம் போட்டவர் இப்படி தொல்லைகள் கொடுத்த அந்த நால்வரும் உறவினர்களே.

ஒரு சின்ன சோதனையிலேயே ஒரு பெரிய உண்மை தெரிந்துவிட்டது. நீங்களும் இந்தப் பரிட்சையைச் செய்து பாருங்களேன். இன்னொரு ஜாதியை மட்டம் தட்டாதீர்கள். தொல்லை கொடுக்கும் சொந்த ஜாதிக்காக நல்லது செயயம் மற்ற ஜாதிக்காரர்களின் ஜாதிகளை மட்டம் தட்டுவது சரியா? சாலையில் ஒரு விபத்தில் சிக்கி ஒருவன் கீழே விழுகிறான் என்று வைத்துக் கொள்வோம். எல்லோரும்தான் ஓடி வந்து அவனுக்கு உதவுவார்களே தவிர விழுந்தவன் எந்த ஜாதி என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அந்த ஜாதிக்காரர்கள் மட்டும் முன்வந்து உதவுவதில்லை.

தொலைக்காட்சியில் செய்தி முடிந்ததும் அறுவை சிகிச்சை பெறப்போகும் நபருக்காக இரத்தம் தேவை என்பார், அறிவிப்பாளர், "A", "B"குரூப் அல்லது "O"குரூப் இரத்தம் தேவை என்று கேட்பாரே தவிர என்றைக்காவது ஒர குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவருக்கு ஆபரேஷன் அவர் ஜாதியைச் சார்ந்தவர் மட்டுமே இரத்தம் தரலாம் என்றும் கேட்பதில்லை. முனுசாமி முதலியாருக்கு தேவை மூணு பாட்டில் முதலியார் இரத்தம், நாகசாமி நாயுடுவுக்குத் தேவை ான்க பாட்டில் நாயுடு இரத்தம். ஐயாசாமி ஐயருக்குத் தேவை ஐந்து பாட்டில் ஐயம் இரத்தம் என்று ஒருபோதும் கேட்பதில்லை. உண்மையில் கூறப்போனால் எனக்கு வெள்ளைக்காரர் இரத்தம்தான் தேவை, கறுப்பர் இரத்தம் கூடாது என்று கூறவத அறிவீனம். உதாரணத்திற்கு ஒரு வெள்ளைக்காரியின் இரத்தத்தில் எய்ட்ஸ் இருந்தால் அந்த இரத்தத்தைப் பெறக்கூடாது. எய்ட்ஸ் இல்லாத கறுப்பர் இரத்தத்தைப் பெறலாம். உடலின் நிறம் வேறுபடலாமே தவிர, இரத்தத்தின் நிறம் வேறுபடுவதில்லை.

இரத்தத்திலேயே இல்லாத வித்தியாசங்களை மனிதர்களாகிய நாம் உண்டாக்கிவிட்டோம். மனிதர்களை ஜாதியின் பெயரால் கூறு கூறாகப் பிரித்துவிட்டோம். உடைத்துவிட்டோம

இதுவரை ஜாதி, ஜாதி என்று நாம் சராசரிக்கும் கீழே இறங்கிப் போய்விட்டோம். இனிமேலாவது, கொஞ்ச நாளைக்கு நாம் மனிதர்களாக இருப்போமே! மாறுதலைப் பார்ப்போமே!...

 

 

 
Powered by FFMedias