உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

அயல்நாட்டுத் தமிழர்களும், தமிழும்

வழிகாட்டும் யாழ்பாணத் தமிழர்கள்

இலங்கைத் தமிழ் இனிய தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், யாழ் தமிழ் இன்று உலகத் தமிழர்களிடையே தமிழின்பால் மிகவும் பற்றும், பாசமும் கொண்டவர்கள் யார் என்றால் சந்தேகமில்லாமல் இலங்கைத் தமிழர்கள்தான். அதுவும் யாழ்ப்பானத் தமிழர்கள். இவர்கள் மொழிப்பற்று நம்மைப் புல்லரிக்க வைக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பலர் உள்நாட்டு போர் காரணமாக, பிழைப்புக்காக வேறு பல நாடுகளுக்குச் சென்றார்கள். அப்படி கனடாவில் குடியேறிய ஒரு தமிழரைச் சந்தித்தேன். இரவோடு இரவாக இலங்கையை விட்டுக் கனடா சென்றேன் என்று கூறினார். எதையுமே எடுத்துச் செல்ல முடியவில்லையா? என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார். "தமிழை எடுத்துச் சென்றேன்" என்றார். இதுதான் இலங்கைத் தமிழர்களின், "யாழ்ப்பாணத் தமிழர்களின் தமிழ்ப்பற்று".

விமானத்தில் இன்னொரு இலங்கைத் தமிழரை ஒருமுறை சந்தித்தேன். "அவரிடம் இலங்கைத் தமிழர்களின் மொழிப்பற்றுப் பற்றிக் கேட்டபோது, அவர் சொன்ன உண்மை என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஒரு புதிய நாட்டுக்குச் செல்லும் தமிழர்கள் தனக்கென்று ஒரு வீட்டைத் தேடி முடித்தவுடன், தான் ஆரம்பிக்கப் போகும், தமிழ்ச் சங்கத்திற்கு இடம் தேடுவார்களாம். அல்லது அங்கு தமிழ்ச் சங்கம் ஒன்றிருந்தால் அதில் உடனடியாக உறுப்பினராகிவிடுவாராம். தமிழிலே தமிழ்ச்சங்கம் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையை வெளியில் வைத்துவிடுவார்களாம்.

தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்காக எக்ஸ்னோரா சார்பாகக் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுத்தோம். அங்கு சென்ற பொழுது, சில இலங்கைத் தமிழ்ப் பெண்கள் எங்களிடம் அவர்களுடைய குறைகளைக் கூறினார்கள். அப்பொழுது என்னிடம் வந்த சென்னைத் தமிழ் நண்பர்களுக்கு அவர்கள் பேசியது புரியவில்லை. உள்ளூர் நண்பர் கேட்டார், "என்ன பேசுகிறார்கள் அவர்கள் தமிழ் புரியவில்லை" என்றார். நான் சொன்னேன், "அவர்கள் பேசுவது கலப்படமற்ற தூய தமிழ். அதுதான் உங்களுக்குப் புரியவில்லை" என்று சொன்னேன்.

கடைசியாக இலங்கைத் தமிழர்கள் தன்னம்பிக்கையையும் விடுவது இல்லை, தமிழையும் விடுவது இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்னொரு சம்பவத்தையும் நினைவு கூர விரும்புகிறேன். "லண்டன் மாநகருக்குச் சென்ற பொழுது நான் கண்ட காட்சி.

அங்கு பூங்காக்களில் வருபவர்கள் உட்கார வசதி செய்து கொடுத்து ஒரு இளைஞர் நூதனமான வழியில் பொருளீட்டிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட முப்பது சாய் நாற்காலிகளை(Easy Chair) வைத்து வாடகைக்குக் கொடுத்துக் கொண்டு இருந்தார். புல் தரையில் அமர விரும்பாத பலர், சாயும் நாற்காலியை வாடகைக்குப் பெற்று, அதை, புல் தரையில் விரித்துப் போட்டு அதன் மீது அமருவார்கள். அரைமணி நேரம் பயன்படுத்துவதற்கு வாடகை கிட்டத்தட்ட முப்பது ரூபாய்க்குச் சமம். அந்த வாலிபர் சாய்வு நாற்காலிகளை வாடகைக்குக் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமர்ந்து கொண்டு புத்தகங்களையும் படித்துக் கொண்டிருந்தார். சாய்வு நாற்காலியைப் பயன்படுத்துவார்கள், தாங்களாகவே அதற்குரிய கட்டணத்தை அந்த இளைஞருக்கு அருகே இருக்கும் ஒரு பெட்டியில் போட்டுவிட்டுச் செல்வார்கள். இந்த இளைஞர் ஒரு கல்லூரி மாணவர். சரியான காசைப் போடுகிறார்களா? என்று பார்ப்பதில்லை. அவர்கள் மீது இவருக்கு நம்பிக்கை, அவர்களும் இவர் நம்பிக்கையைப் பாழாக்குவதில்லை. அந்த பூங்காவின் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார். அங்கு பூங்காவைச் சுற்றிப் பார்க்கச் சென்ற எனக்கு அந்தப் பூங்காவைவிட அதிகம் கவர்ந்தது, அந்த இளைஞரே. அவருக்கருகே அமர்ந்து பேச ஆரம்பித்தேன். ஒரே நிமிடத்தில் நாங்கள் புரிந்து கொண்டோம், நாங்கள் இருவரும் தமிழர்கள் என்று. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், நான் இந்திய நாட்டுத் தமிழன், அவர் இலங்கை நாட்டுத் தமிழர்.

அங்கு பூங்காக்களில் வருபவர்கள் உட்கார வசதி செய்து கொடுத்து ஒரு இளைஞர் நூதனமான வழியில் பொருளீட்டிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட முப்பது சாய் நாற்காலிகளை (Easy Chair) வைத்து வாடகைக்குக் கொடுத்துக் கொண்டு இருந்தார். புல் தரையில் அமர விரும்பாத பலர், சாயும் நாற்காலியை வாடகைக்குப் பெற்று, அதை, புல் தரையில் விரித்துப் போட்டு அதன் மீது அமருவார்கள். அரைமணி நேரம் பயன்படுத்துவதற்கு வாடகை கிட்டத்தட்ட முப்பது ரூபாய்க்குச் சமம். அந்த வாலிபர் சாய்வு நாற்காலிகளை வாடகைக்குக் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமர்ந்து கொண்டு புத்தகங்களையும் படித்துக் கொண்டிருந்தார். சாய்வு நாற்காலியைப் பயன்படுத்துவார்கள், தாங்களாகவே அதற்குரிய கட்டணத்தை அந்த இளைஞருக்கு அருகே இருக்கும் ஒரு பெட்டியில் போட்டுவிட்டுச் செல்வார்கள். இந்த இளைஞர் ஒரு கல்லூரி மாணவர். சரியான காசைப் போடுகிறார்களா? என்று பார்ப்பதில்லை. அவர்கள் மீது இவருக்கு நம்பிக்கை, அவர்களும் இவர் நம்பிக்கையைப் பாழாக்குவதில்லை. அந்த பூங்காவின் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார். அங்கு பூங்காவைச் சுற்றிப் பார்க்கச் சென்ற எனக்கு அந்தப் பூங்காவைவிட அதிகம் கவர்ந்தது, அந்த இளைஞரே. அவருக்கருகே அமர்ந்து பேச ஆரம்பித்தேன். ஒரே நிமிடத்தில் நாங்கள் புரிந்து கொண்டோம், நாங்கள் இருவரும் தமிழர்கள் என்று. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், நான் இந்திய நாட்டுத் தமிழன், அவர் இலங்கை நாட்டுத் தமிழர்.

கல்லூரியில் படிக்கும் அந்த இளைஞர், படிப்பிற்கு நிறைய பணம் செலவு செய்ய வேண்டியிருப்பதால் கடுமையாக உழைக்க வேண்டி இருப்பதாகக் கூறினார். சாய்வு நாற்காலி வாடகைக்கு விடும் தொழில் மட்டுமின்றி, உணவு விடுதியில் உணவு பரிமாறுவது, தட்டுகள் கழுவுவது என்று பல வேலைகள் செய்வதாகக் கூறினார். இதையெல்லாம் செய்துவிட்டு கல்லூரிக்கு அவர் செல்கிறார். கடைசியாக அவர் சொன்னது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. "கல்லூரி செல்வது, தொழில் புரிவது இவைகளுக்கு இடையே ஞாயிற்றுக் கிழமை தோறும் நடக்கும் தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்வேன்" என்றார். பலநாடுகளுக்குச் சென்று, அந்நாடுகளில் பயிற்சி வகுப்புகள் எடுப்பவன் என்ற முறையில் உலகிலேயே அதிக தமிழ் மொழிப்பற்று உடையவர்கள் யார் என்று கேட்டால், தூக்கத்திலும் சொல்வேன், அது இலங்கைத் தமிழர்கள்தான் என்று.

வேரோடு பிடுங்கி வெளிநாடுகளில் எறியப்பட்ட செடிகள்தான் இலங்கைத் தமிழர்கள். ஆனால் விந்தையிலும் விந்தை இவர்கள் எறியப்பட்ட நாடுகளிலே ஏராளமானோர் மரமாக வளர்ந்து இருக்கிறார்கள், தாங்கள் வளர்ந்து மற்றத் தமிழர்களுக்கும் நிழல் தருகிறார்கள். ஒரு ஹோட்டலில் பிளேட்டு கழுவிய இளைஞர் இப்பொழுது லண்டன் நகரிலே ஐந்து துரித உணவு விடுதிகளுக்குச் சொந்தக்காரர். இவர்களுடைய தளராத தன்னம்பிக்கையையும், அயரா உழைப்பும் உலகவாழ் தமிழர்களுக்கு ஒரு புத்துணர்வு தருகிறது. ஒரு ஆக்கப்பூர்வமான பாடமாகத் திகழ்கிறது.

ஹாங்காங் இஸ்லாமியத் தமிழர்கள்

ஹாங்காங்கில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் உண்டு. இதில் பெரும்பான்மையான உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் என்றால் தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக கீழக்கரை, காயல்பட்டினம், திருநெல்வேலி போன்ற ஊர்களிலிருந்து குடியேறிய இஸ்லாமிய சகோதரர்கள். இவர்களுடைய தமிழ் மொழிப்பற்றும், மொழி அறிவும் என்னை வியக்க வைத்தன. என்னை வியப்பில் ஆழ்த்திய ஹசன் அலி, டாக்டர்.அயூப், சைப்புதின், கமாலுதின், யூனஸ்பாய், யூசப் பாய், அமீன், இல்லியாஸ் போன்ற ஏராளமானோர்.

இவர்கள் தமிழ் இலக்கியங்களை முழுமையாக அறிந்தவர்கள். இவர்களின் தமிழ் மிகச்சிறந்த தமிழ், தூய தமிழ். ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்தும் தமிழ் இலக்கியக் கூட்டங்களில் இவர்கள் தமிழ் பேச்சாற்றல் என்னை அயர வைத்தது.

ஒருமுறை கம்ப இராமாயணத்தைப் பற்றி ஒரு இலக்கிய கருத்தரங்கு, பத்துப் பேர் பேசினார்கள். ஏழு பேர் இஸ்லாமிய சகோதரர்கள். கம்ப இராமாயணத்தை இரசித்து கம்பனின் படைப்பை அனுபவித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கம்பர் உயிரோடு இருந்திருந்தால், அவர்களைக் கட்டித் தழுவி இருப்பார். கூட்டம் முடிந்தவுடன் நாங்கள் இஸ்லாமிய சகோதரர்களை மனமாரப் பாராட்டிக் கொண்டிருந்தோம். அப்போது என்னுடன் ஹாங்காங் வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்து மதத் தமிழர் ஒருவர் வெகுளித்தனமாகக் கேட்டார், "நீங்கள் முஸ்லீம்கள் ஆயிற்றே, கம்ப இராமாயணம் இந்துக்களின் காப்பியமாயிற்றே" என்று கேட்டபொழுது, இஸ்லாமிய சகோதரர் பதிலளித்தார். "அதனால் என்ன, கம்ப இராமாயணம் ஒரு இலக்கியமாயிற்றே, அதுவும் தமிழ் இலக்கியமாயிற்றே விட்டுவிடுவோமா" என்றாரே பார்க்கலாம். அப்போது ஒன்று புரிந்தது. மொழி அனைவரையும் இணைக்கும் ஒரு பாலம் என்று. மறைந்த உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு.மு.மு.இஸ்மாயில் அவர்கள் கம்ப இராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர். சென்னைக் கம்பன் கழகத்தைக் கட்டிக்காத்தவர். இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றியவர். அவருக்கு "கம்பர் ரசிகமணி" என்ற பட்டமே வழங்கப்பட்டது. இந்நூலைப் படிக்கும் தமிழ் உள்ளங்கள் மேலே சொல்லப்பட்ட மிகச்சிறந்த உதாரணங்களைப் பின்பற்ற வேண்டும். இலங்கைத் தமிழர்களைப் போல் இஸ்லாமிய தமிழர்களைப் போல், மொழிப்பற்றுப் பெற்றிட வேண்டும். தமிழ் உள்ளங்களுடன் தமிழில்தான் உரையாற்ற வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் அயல்நாட்டுத் தமிழர்களின் இல்லங்களில் இருந்து தமிழ் வெளியேறிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்கிக் கொண்டிருப்பது நம்முடைய கலைத்துறையே. தமிழ் பேசப்படாத தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ் தமிழர்களின் இல்லங்களில் தமிழ் கேட்கிறது. வீடியோ சாதனங்கள் மூலம் தமிழ்ப் படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். (அவ்வளவு ஏன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த தமிழ்ப் படங்களை ஜப்பானியர்களே விரும்பி பார்க்கிறார்கள்). திரைப்படங்களாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் இன்று வெளிநாட்டுத் தமிழர் வாழ்க்கையிலே தமிழ் ஓரளவு புதுவாழ்வு பெற்றிருக்கிறது. இதுவே "வீட்டு மொழி தமிழ், பேச்சு மொழி தமிழ்" என்ற நம் அனைவரின் கொள்கையைப் பரப்ப வேண்டிய தருணம்.

 

 
Powered by FFMedias